கோவை பாலக்காடு மெயின் ரோடு பகுதியில் உணவு விடுதி நடத்தி வருபவர் முனிராஜ். இவரது மனைவி புவனேஷ்வரி. செவ்வாயன்று (இன்று) காலை பொருட்கள் வாங்குவதற்காக புவனேஷ்வரி, தனது அண்ணன் மகன் மோகன்தாஸுடன் இரு சக்கர வாகனத்தில் குனியமுத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இவர்களுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி புவனேஷ்வரி கீழே விழுந்த நிலையில் பேருந்தின் பின் சக்கரம் இவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மீது மேற்கு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் அரசு பேருந்து மோதி பெண் இறந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''மாநகராட்சியின் சார்பில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அதிவேகமாக வரும் வாகனங்களால் இவ்வாறான விபத்துகள் தொடர்ந்து ஏற்படுகிறது. இதுகுறித்து, காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்றனர்.