தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மின்வாரிய ஓய்வு பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் இன்று காலை கோவை டாடாபாத் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எதிரில் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார்.

போராட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் அதில், ஓய்வூதியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் காலநிலை பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஒப்பந்தம் மற்றும் சொசைட்டி பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்கவும், மருத்துவ வசதிகளில் குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவ உதவி திட்டத்தில் சேர மீண்டும் அவகாசம் வழங்கவும். சொந்த பணி விடுவிப்பு - நிலவைத் தொகையில் 15 ஆயிரம் பேர்களுக்கு பணப்பயன்கள் கிடைக்கவில்லை அவர்களுக்கு முழுத்தொகையும் வழங்கப்படவும், காலி பணியிடங்களை நிரப்பவும், ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை சட்டம் 1972ன் படி, பணிக்கொடையினை கணக்கிட்டு நிலுவைத்தொகையினை வழங்கவும், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாளுக்கு பிறகு அவர்களது குடும்பத்தில் வருமானம் ஈட்ட முடியாத மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இதில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் ராமச்சந்திரன், உதவித் தலைவர்கள் நாச்சிமுத்து, சுப்பிரமணியன், ஆறுமுகம் மற்றும் 150 மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.