கோவை மாவட்டத்தில் நூர்பாலைகள் வளர்ச்சி மற்றும் ஆயத்த ஆலைகள் வளர்ச்சி குறித்து ஜெர்மன் தூதரக பிரதிநிதி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெர்மன் தூதரக பிரிதிநிதி வொல்போன் கெளைன் தலைமையிலான குழு, ஜெர்மன் தொழில்முனைவோர் ஆகியோர் ஆட்சியருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், கோவை மற்றும் திருப்பூரில் மாவட்ட நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆலைகள் வளர்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் கோவை மாவட்ட தொழில் நிறுவன சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.