திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. பவர்லூம் மற்றும் நிலவியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பத்திரப் பதிவுக்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பத்திரப் பதிவு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது, தனது காரை ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நிறுத்தியுள்ளார். பத்திரப் பதிவு பணிகள் முடித்துவிட்டு காரை நோக்கி வந்த போது காரின் கண்ணாடி வெட்டப்பட்டு உள்ளே இருந்த 6 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு பாதுகாப்பின் கீழ் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே எந்நேரமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். இந்நிலையில், பட்டப்பகலில், காரின் கண்ணாடியை நேர்தியாக வெட்டி பணம் கொள்ளையடித்திருப்பது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.