கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணிகள்
மேற்கொள்ளப்பட உள்ளன. அதனடிப்படையில், செவ்வாயன்று (இன்று) ஜெர்மன்
தூதரகத்திலிருந்து பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு ஜெர்மன்
அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளான உல்ஃபிரான் கிலைன் மற்றும் டொரசில் ஆகியோர்
கோவை மாவட்டத்திற்கு வருகைபுரிந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயனுடன் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், ஸ்மார்ட் சிட்டியாக கோவை மாவட்டம் மாற மேற்கொள்ளப்படும் வழிமுறைகள், திட்ட மேம்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.