இந்திய விமானத் துறையின் சார்பில் லஞ்ச ஒழிப்பு வார விழா

ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் சார்பில் கோவை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை கோவை விமான நிலையத்தில் கடைபிடிக்கப்பட்ட இந்த விழாவில் கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், லஞ்ச ஒழிப்பை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவையில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா, சுகுனா பிப் பள்ளி, கே.சி.டி, ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து பெருந்திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் விமான நிலைய ஊழியர்களும் பங்கேற்றனர்.



இதனைத்தொடர்ந்து, இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பரிசுகள் வழங்கும் விழாவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இதனிடையே, மாணவ, மாணவிகள் ஓவியப் போட்டியில் பங்கேற்றபோது வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை, கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநர் ஜி.பிரகாஷ் ரெட்டி, ஜெஜிஎம் (ஏடிஎம்) வி.பிரதீப் குமார், டிஜிஎம் (சிவில்) ஆர்.குல்ஸ்ரெஸ்தா உள்ளிட்ட அனைத்துறை தலைவர்களும் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...