கோவை: ஆலந்துரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் சந்திரா (19). இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அம்மை நோய் ஏற்பட்டது. இதனால், முகம் மற்றும் கை கால்களில் அவருக்கு தழும்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து மனமுடைந்த அவர் நேற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பேரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சந்திராவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.