500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்த பிரதமர்- திமுக வரவேற்பு


நாட்டின் பொருளாதாரத்தை மனதில் வைத்து சீர்திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடைசெய்துள்ள நடவடிக்கையினை திமுக வரவேற்பதாக அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் ஸ்டாலின் வருகைபுரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

''நாட்டின் சீர்திருத்தத்தை மனதில் வைத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை திமுக வரவேற்கிறது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் கருப்புப் பணத்தை மீட்டு சாமானியர்களின்  வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது ?. பொது மக்களுக்கு உரிய காலவகாசம் வழங்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அறிவிப்பு வெளியான போது பெட்ரோல் பங்க், பாலகம், மருந்தகங்களில் 500, 1000 ரூபாய் வாங்கப்படும் என தெரிவித்திருந்தாலும் தற்போது எங்கேயும் அந்த ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதைப்போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...