இந்தியாவின் மிகப்பெரிய ஆதரவாளர் டிரம்ப். இதை தேர்தல் பிரசாரத்தில் அவரே பலமுறை தெரிவித்துள்ளார். நியுஜெர்சியில் சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பேசும் போது, “இந்து மதத்தின் மிகப்பெரிய ரசிகன் நான். இந்தியாவின் தீவிர ஆதரவாளர். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியர்கள் மற்றும் இந்து மதத்திற்கு வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு உண்மையான நண்பன் கிடைப்பான். மோடியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.” என்றார்.
இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம், வர்த்தகம், தீவிரவாத எதிர்ப்பு, ராணுவ உடன்படிக்கை, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் விஷயத்தில் டிரம்ப் இந்தியாவிற்கு அதிக ஒத்துழைப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் டிரம்பால் நெருக்கடியை சந்திக்கும்.