கோவை மாவட்ட மாநகராட்சியின் சார்பில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்ட்டிக் பைகளின் உபயோகத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்கு உட்பட்ட 74வது வார்டு ஜி.எம்.நகர் பகுதியில் பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். இதில், அப்பகுதியில் செயல்படும் ஒரு கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இந்நிகழ்வின் போது, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.