கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜன், ஜோதி தம்பதிகளுக்கு கடந்த 8 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜோதிஅரசு மருத்துவமனையில் உள்ள பிரசவத்திற்கு பிந்தைய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருடன் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் எனக்கூறி அர்ச்சனா என்பவரும் வார்டில் இருந்து வந்துள்ளார். தனது குழந்தை ஐசியூவார்டில் இருப்பதாக அர்ச்சனா கூறி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் மருத்துவரை பார்க்க சென்ற ஜோதி தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு அருகில் இருந்த அர்ச்சனாவிடம்கூறிச்சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது அர்ச்சனாவும் குழந்தையும் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் மூலம் காவல்துறையில் புகார் அளித்தார்.இதையடுத்து காவல்துறையினர் சிசிடிவி கேமாராவின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, இதில் காரின் மூலம் கடத்தப்பட்ட கால் டாக்சி ஒட்டுனரான அசோக் என்பவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் துடியலூர் பகுதியை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் அவர்களை இறக்கி விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து கார் ஒட்டுனரை அழைத்து சென்று அப்பகுதி பார்த்த போது வீட்டில் குழந்தை இருப்பதை கண்டு அவர்களிடம் விசாரிணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து நரேஷ் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா, அவருடைய அம்மா பேபி, அப்பா ராமலிங்கம் மற்றும் நரேஷின் அம்மா கோமதி ஆகியோரை கைது செய்து பந்தைய சாலையில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைபற்றப்பட்ட குழந்தையை அவருடைய தாயார் ஜோதியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 நாளான ஆன பச்சிளம் குழந்தையை கடத்தப்பட்டு 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.