அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை ஆறு மணி நேரத்தில் மீட்பு அசத்திய கோவை போலீஸ்!



கோவை சிங்காநல்லூர்  வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜன், ஜோதி தம்பதிகளுக்கு கடந்த 8 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜோதிஅரசு மருத்துவமனையில் உள்ள பிரசவத்திற்கு பிந்தைய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருடன் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் எனக்கூறி அர்ச்சனா என்பவரும் வார்டில் இருந்து வந்துள்ளார். தனது குழந்தை ஐசியூவார்டில் இருப்பதாக அர்ச்சனா கூறி வந்ததாக தெரிகிறது.



இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் மருத்துவரை பார்க்க சென்ற ஜோதி தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு அருகில் இருந்த அர்ச்சனாவிடம்கூறிச்சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது அர்ச்சனாவும் குழந்தையும் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் மூலம் காவல்துறையில் புகார் அளித்தார்.இதையடுத்து காவல்துறையினர்  சிசிடிவி கேமாராவின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, இதில் காரின் மூலம் கடத்தப்பட்ட கால் டாக்சி ஒட்டுனரான அசோக் என்பவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில் துடியலூர் பகுதியை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் அவர்களை இறக்கி விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து கார் ஒட்டுனரை அழைத்து சென்று அப்பகுதி பார்த்த போது வீட்டில் குழந்தை இருப்பதை கண்டு அவர்களிடம் விசாரிணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து நரேஷ் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா, அவருடைய அம்மா பேபி, அப்பா ராமலிங்கம் மற்றும் நரேஷின் அம்மா கோமதி ஆகியோரை கைது செய்து பந்தைய சாலையில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைபற்றப்பட்ட குழந்தையை அவருடைய தாயார் ஜோதியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 நாளான ஆன பச்சிளம் குழந்தையை கடத்தப்பட்டு 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...