500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த மக்கள் பழைய 500, 1000 ரூபாயை கொண்டு நாளை ஒரு நாள் (11.11.2016) வரி செலுத்தலாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வாறு வரி செலுத்தும் பட்சத்தில் அதற்கான ரசீது உடனே வழங்கப்படும் எனவும், மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பாக்கி வரிகளை முறையாக செலுத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு வரி செலுத்தும் பட்சத்தில் அதற்கான ரசீது உடனே வழங்கப்படும் எனவும், மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பாக்கி வரிகளை முறையாக செலுத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.