பந்த்னாகரில் செயல்படும் அசோக் லைலான்டின் கனரக வாகன உற்பத்தி ஆலைக்கு 2016ம் ஆண்டுக்கான தரத்தினை போற்றும் வகையில் டெமிங் விருது வழங்கப்பட்டது.
.jpg)
ஜப்பான் நாடு அல்லாமல் டெமிங் விருதினைப் பெரும் வேற்று நாட்டு நிறுவனம் இதுவே முதன்முறையாகும். இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லைலேன்ட் நிறுவனத்தின் பந்த்நகர் வாகன உற்பத்தி ஆலைக்கு 2016ம் ஆண்டுக்கான சிறந்த தரத்தின் அடிப்படையில் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது டிக்யூஎம் தரக்கொள்கையை சிறப்பாக பின்பற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். கனரக வாகன உற்பத்தியில் இவ்விருது வழங்குவதும் உலக அளவில் இது முதல்முறை என கூறப்படுகிறது.
இவ்விருதை அசோக் லைலேன்ட் நிறுவனத்தின் விநோத் கே தாசரி ஜப்பான் நாட்டில் நடைபெற்ற விழாவில்
பெற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''அசோக் லைலேன்டைச் சார்ந்த நாங்கள் இவ்விருதினைப் பெருவது பெருமைவாய்ந்த தருணமாகும். ஜப்பான் வெளியே கனக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இந்த விருது பெரும் நிறுவனமாக அசோக் லைலேன்ட் இருப்பது எங்களது நிறுவனத்திற்கு மகுடம் சூடுவது போல் உள்ளது. எங்கள் பந்த்நகர் உற்பத்தி ஆலை நவீன தொழில்நுட்பத்துடனும், விதிமுறைகளையும் கொண்டுள்ள முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சாலை ஆகும். எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்'' என்றார்.
அசோக் லைலேன்டின் மூத்த அதிகாரி ஆர்.சீனிவாசன் கூறியதாவது:-
நாங்கள் எங்கள் நிறுவனத்தில் தரத்திற்கும், வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் தேவைகளைப் பொருத்து வாகனங்களை உற்பத்தி செய்கிறோம். திறமையான ஊழியர்களின் செயல்பாடு, தொழில்நுட்பம் போன்றவையே எங்களது தரத்தின் அடிப்படை ஆகும். சிறந்த ஒருங்கிணைப்பே எங்கள் தரத்தினை மேம்படுத்துகிறது'' என்றார்.