கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள ALG பள்ளியில் 3முதல்5வயது குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் இருந்து 25 நர்சரி பள்ளிகள் மற்றும் 15 தனியார் பள்ளிகள் என 40 பள்ளிகளில் இருந்து 170க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஆர்வதுடன் கலந்து கொண்டனர்.

இதில் குழந்தைகள் தேசிய தலைவர், கடவுள்கள் மற்றும் இயற்கையை போற்றும் விதத்தில் உடைகளை அணிந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். போட்டியில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.





