பெண் உதவி பேராசிரியரிடம் 12 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மனைவி பிரதீபா (32). தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று இரவு பிரதீபா மற்றும் அவரது சகோதரி கிருத்திகா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றனர். சின்னியம்பாளையம் பேருந்து  நிலையம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பிரதீபா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலி சங்கிலையை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே அருகிலிருந்த பொது மக்கள், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரட்டினர். ஆனால், அதற்குள் அவர்கள் இருவரும் அதிவேகமாக தப்பிச்சென்றனர். இது குறித்து பிரதீபா பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...