ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் கோவையில் இன்று நடைபெறுகிறது.
கோவை சாஸ்திரி மைதானத்தில் 3:45 மணிக்கு துவங்கி ஆரோக்கியசாமிசாலை, தடாகம் ரோடு வழியாக சென்று மீண்டும் சாஸ்திரி மைதானம் வந்தடைகிறது.பின்னர் அங்கு பொது நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த ஊர்வலத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்குபெற உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை காண 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் திரளும் வாய்ப்பு உள்ளது. அசம்பாவித சம்பங்கள் நிகழாமல் இருக்க ஊர்வலம் நடக்கும் பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்று அவர் கூறினார்.