கர்நாடக பாடகரும், சங்கீத மேதையுமான பாபநாசம் சிவன் அவர்களின் 126வது பிறந்த நாள் விழா கோவை ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் 45க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கர்நாடக இசைக்கச்சேரி, நடனங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாடகர்கள் கலைமாமணி ருக்மனி ரமணி மற்றும் அசோக் ரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்றோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பலரும் பார்த்து மகிழ்ந்தனர்.
