கோவை நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பண்ணாரி. இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு நிஷாலினி என்ற 16 வயது மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற நிஷாலினி வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது பெற்றோர் வெரைட்டி ஹால் போலீசாரிடம் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.