கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை அடுத்த சம்மந்தம் சாலையில் தடை செய்யப்பட்ட விளையாட்டான லாட்டரி சீட்டுக்களை வைத்து சூதாடுவதாக ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து உதவி ஆய்வாளர் பாலச்சந்தர் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டம் விளையாட்டில் ஈடுபட்ட சம்மந்தம் சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ், ஈஷ்வரன், சிவக்குமார், ஆனந்த், சுந்தரம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.25 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.