உலக சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி இன்று உலக சக்கரை நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சக்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் உலக சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இப்பேரணியை கோவை மாவட்ட வருவாய்துறைத் தலைவர் கிருஸ்துராஜ் துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோ முன்னிலை வகித்தார். இதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிவிரைவுப் படையினர் கலந்து கொண்டனர். இப்பேரணி அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.



இது குறித்து நீரிழிவு துறைத் தலைவர் மருத்துவர் ஜெயப்ரகாஷ் கூறுகையில்:-

பொது மக்களுக்கு சக்கரை நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சக்கரை நோயை சரிசெய்ய செயற்கை இன்சூலின் மாத்திரை, இன்சூலினை ஊசி வடிவில் எடுத்து கொள்கிறார்கள். தினமும் 400க்கும் மேற்பட்ட சக்கரை நோயாளிகளுக்கு இலவசமாக சிகிக்சை அளிக்கப்படுகிறது.

மேலும் இலவச இன்சூலின் வழங்கப்படுகிறது. நோயாளியின் உடல் அமைப்புக்கு  ஏற்றவாறு இன்சூலின் உற்பத்தியை தூண்டும் உடற்பயிற்சி முறைகள் உள்ளன. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்க முடியும். தினமும் இரண்டு வேளை குறைந்தபட்சம் 30 நிமிட வேக நடைபயிற்சி, ஒருமணி நேர விளையாட்டு, நடந்து செல்வது போன்றவற்றை செய்வதன் மூலம் உடலில் சக்கரை நோய் வராமல் தடுக்கலாம் எனக் கூறினார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...