கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் யாழ்முடி நாதன் என்கிற கவுதம் (27). இவர் லோட்டஸ் மற்றும் மூண் தொலைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கடந்த வாரம் தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்காக கொடைக்கானலுக்கு சென்றார். திருமணம் முடிந்து சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு, எதிர்பாராத விதமாக வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
.jpg)
இது குறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுதம்-ன் உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தற்போது கவுதம்-ன் உடல், அவரது சொந்த ஊரான கோவைக்கு கொண்டுவர உள்ளது. இது குறித்து தகவலறிந்த கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் இன்று காலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும், கருப்பு பேட்ச் அணிந்து துக்கம் அனுசரித்துள்ளனர்.
.jpg)
உடன் பணியாற்றிய பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், சக பத்திரிக்கையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.