அமிர்த் சிறப்பு மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

பேப்டிஸ்ட் அகாடமி பள்ளி மாணவர்கள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அமிர்த் சிறப்பு மையத்தில் உள்ள குழந்தைகளோடு இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாடினர். 



பேப்டிஸ்ட் அகாடமி பள்ளியின் முதல்வர் டேனியல் கூறுகையில்:-
குழந்தைகள் தினவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் பள்ளி மாணவர்கள் இந்த வருடம் குழந்தைகள் தின விழாவினை அமிர்த் சிறப்பு மையத்தில் இவர்களுடன் கொண்டாடுகின்றனர். இவர்களை புரிந்து கொண்டு இவர்களுக்கு உதவி செய்வது மூலம் மாணவர்கள் பல்வேறு நல்ல செயல்களை கற்றுக்கொள்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு கற்பிக்கப்டும் பல்வேறு பயிற்சிகள் மூலம் இக்குழந்தைகள் சிறந்து விளங்குகின்றனர். இந்த குழந்தைகளின் திறமை மிக்க செயல்களை பார்த்து எங்கள் பள்ளி மாணவர்களும் பல்வேறு நற்செயல்களை இவர்கள் மூலம் கற்றுக்கொள்வது பயனளிக்கும் விதமாகவும் இருக்கும் என்றார்.



அமிர்த் சிறப்பு மையத்தின் முதல்வர் நளினி ஜெயபிரகாஷ் கூறுகையில்:-
அமிர்த் சிறப்பு மையம் மூளை வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியாக செயல்பட்டு வருகிறது. ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யும் விதமாக இம்மையம் தொடங்கப்பட்டது. இம்மையம் துவங்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இம்மையத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது உடையவர்கள் வரை உள்ளனர். 50 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இம்மையம் தற்போது 140 மாணவர்கள் கொண்டு செயல்படுகிறது. இம்மையத்திற்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனவர்கள் பல்வேறு உதவிகள் செய்து  வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் வயதுக்கும் கற்றல் திறனுக்கும் ஏற்ப பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு பயிலும் மாணவர்களுக்கு சுயசார்பு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, ஆரம்ப கல்வி, பிசியோதெரபி, பேச்சு திறன் போன்றவற்றை வழங்கபடுகிறது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...