குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த கோவை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று ஆர் எஸ் புரம், ஒப்பணக்கார வீதி, பீளமேடு, ராம்நகர் மற்றும் புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இதில் ஏராளமான பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்களை குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்

இதில் ஏராளமான பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்களை குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்