கோவை கணபதியை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். அ.இ.அ.தி.மு.க-வின் உறுப்பினரான இவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பயன்பெரும் வகையில் 20 கட்டில்களை வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'முதல் அமைச்சர் பூரண குணமடைய வேண்டி பிராத்தனை செய்து 20 கட்டில்களை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளேன். உடனடியாக அவர் எழுந்து தமிழகத்தில் நல்லாட்சி புரிய வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த கட்டில்களை தயாரிக்க ரூ.1.5 லட்சம் செலவானது' என்று அவர் கூறினார்.