நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (22). பி.இ. கணினி அறிவியல்
பட்டதாரியான இவருக்கு கணையத்தில் அழற்சி ஏற்பட்டு நாமக்கல்லில் ஒரு தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை
பலனளிக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு
கோவையில் செயல்படும் ஜெம் மருத்துவமனையில் கணைய கல்லீரல் தீவிர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலைமை மருத்துவர் பழனிவேலு
தலைமையில் மருத்துவர்கள் கான், ரமேஷ், திவாகர் ஆகியோர் சிகிச்சை
மேற்கொண்டனர்.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பின் அறுவை சிகிச்சை எதுவுமின்றி மருந்துகள் மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி தற்போது அவர் நல்ல முறையில் உடல் நலம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சி.பழனிவேலு கூறுகையில், ''பித்தப்பை கற்களின் தூண்டுதலால் தான் கணையம் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மது அருந்துதல், வைரஸ் கிருமிகள் காரணமாக கணையம் பாதிக்கப்பட்டு வருகிறது. உரிய தருணத்தில் சரியான சிகிச்சை அளித்தால் கணைய அழற்சியில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி விடலாம்'' என்றார்.