தனியார் மருத்துவமனையில் 3 வயது குழந்தை உயிரிழந்ததால் பெற்றோர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தனர்

கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துவிட்டதாகக் கூறி குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை கண்ணாடிக் கதவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். அவர் தனது மூன்றரை வயது பெண் குழந்தையான தீபஸ்ரீ-க்கு உடல் நிலை குறைவு காரணமாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சைல்ட் டிரஸ்ட் எனும் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

செவ்வாயன்று குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு நிமோனியா நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சூழலில் புதனன்று (இன்று) பிற்பகல் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து மருத்துவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகக் கூறி பெற்றோர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த குழந்தையின் தந்தை சிவகுமார் திடீரென மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு கதவு கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை அனுமதித்தது  முதல் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறி அலைகழித்ததாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...