கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான
வனவிலங்குகள் மற்றும் புள்ளி மான்கள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்ட
வறட்சியின் காரணமாக தண்ணீரினைத் தேடி வன விலங்குகள் வனப்பகுதியினை
ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் நுழைந்து வருவது தொடர் கதையாக இருந்து
வருகிறது.
.jpg)
இந்த நிலையில் பெத்திகுட்டையை அடுத்த ஓதிமலை காரனூரில் செவ்வாயன்று இரவு இரண்டு புள்ளி மான்கள் தண்ணீரை தேடி முத்துசாமி என்பவரது தோட்டத்தினுள் புகுந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 100 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
.jpg)
பின்னர், காலையில் விவசாய பணிக்காக சென்ற விவசாயி கிணற்றின் உள்ளே மான்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மான்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், அதில் ஒரு புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், உயிரோடு இருந்த மற்றொரு மானை மீட்ட வனத்துறையினர் ஓதிமலை காட்டு பகுதியில் பத்திரமாக விட்டனர்.
வனவிலங்குகள் தண்ணீரினை தேடி கிராம பகுதிகளில் நுழைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறுமுகை வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.