கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியில் செயல்பட்டு வரும் தேவாலயத்தில்
மேலாளராக பணியாற்றி வந்தவர் ஜெயராஜ் (70). கடந்த சில வருடங்களுக்கு முன்பு
இவர் அந்த தேவாலயத்தில் பணியாற்றும் 30 வயது பெண்ணை வன்கொடுமை செய்ததாகக்
கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத்
தொடர்ந்து, அவர் மீது 376 (பாலியல் வன்கொடுமை), தமிழ்நாடு பெண் வன்கொடுமை
உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், ஜெயராஜுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்த வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், ஜெயராஜுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.