புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: ஓட்டுநர் பலி

அசாம் மாநிலத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒட்டுநர் உயிரிழந்தார். அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாராந்திர ஊதியம் வழங்குவதற்காக வங்கியில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டது. பின்னர் அந்த பணத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அங்குள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது. தேயிலை தோட்டத்துக்கு, பணம் இருந்த வாகனத்தை ஓட்டுநர் ஓட்டிச்சென்றார். அவருடன் பாதுகாவலர், தோட்ட தொழிலாளி ஆகியோரும் சென்றனர். திடீரென வழியில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று பணம் கொண்டு சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகாமையில் உள்ள மக்கள் ஒடி வந்ததால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்ய அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...