வீணாய் போகும் குடிநீர்!
கோவை, ஹோப்ஸ் பகுதியையும், சிங்காநல்லுர் பகுதியையும் இணைக்கும் சாலையான காமராஜர் சாலையில் குடிநீர் குழாய் உடைந்த சாலையோரங்களில் வீணாக குடிநீர் செல்கிறது. அப்பகுதியில் நடந்து செல்லும் பொது மக்கள் சாலையோரமாக செல்வதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகின்றனர். இதனை சரிசெய்ய கோவை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை ஓரங்களில் வெட்டப்பட்ட மரம் அகற்றப்படவில்லை!
59வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் கடந்த தீபாவளி முன்பு பெய்த கன மழையால் அப்பகுதியில் சாலைஓரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. பின்னர், சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு உடனடியாக மரத்தை அகற்றுவதற்காக மாநகராட்சி பணிகளை மேற்கொண்டது. வெட்டப்பட்ட மரத்தை அப்பகுதியில் சாலையோரங்களில் போடப்பட்டுள்ளது. இன்னும் அதனை அகற்றப்படாமல் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கரடு முரடான சாலை!
சிங்காநல்லூர், 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான தேவேந்தர் வீதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி!
சிங்காநல்லூர், 63வது வார்டுக்கு உட்பட்ட தேவேந்தர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தொட்டி மூலம் உப்புத்தண்ணீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பராமரிக்கப்படாமல் உள்ளதால் இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. இதனை சரிசெய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.