தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி சாந்தி (53). இவர், கடந்த வாரம் தேவம்பாளையம் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு வந்தார். வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தியிடம் முகவரி கேட்டனர். சாந்தி தான் ஊருக்கு புதிது என்று சொல்லும் போது, அந்த வாலிபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காமிரக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.