பிரபல தகவல் பரிமாற்றும் வாட்ஸ்அப் செயலியானது உலகில் பல கோடி மக்களால் அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த உண்மையே. மக்களின் பெரிதும் கவரும் வகையில் வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக இணைக்கப்பட்டது தான் வீடியோ கால் வசதி. இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் என அனைத்து பயனாளர்களுக்கும் அதிராகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ கால் வசதியினைப் பெற பலரும் தங்களது கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து அந்த வசதியினைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, வாட்ஸ்அப்-யில் வீடியோ கால் வசதியினைப் பெற இந்த லின்க்கை க்ளிக் செய்யவும் என ஒரு இணையதள குறியீடு உலா வந்துகொண்டிருக்கிறது. அதனை க்ளிக் செய்வதன் மூலம் நம் வாட்ஸ்அப் செயலியில் உள்ள தங்களை குறித்த பல தகவல்கள் வேறொரு நபர் மூலம் திருடப்படுவது பெரும்பாலானோர் அறியாத உண்மை.
இந்த தவறான போலி இணையதள லின்க்கானது வாட்ஸ்அப் அல்லாது சில தகவல் திருடும் தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், வாட்ஸ்அப் பயனாளர்கள் இவ்வாறான போலி லின்க்கினை தவிர்த்துவிட வேண்டும் எனவும் அந்நிறுவனத்தின் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.