மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் சில்லரை தட்டுப்பாடு நிலவியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய பெருமன்றத்தை சேர்ந்த 12 பேர் கோவை எஸ்.பி.ஐ. தலைமை வங்கி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாட்டின் 80% பணபுழக்கத்தை முடக்கிய மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பணமுதலைகளுக்கும், மல்லையா போன்றவர்களுக்கும் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறது. கல்விகடன் வாங்கிய மாணவர்களும், விவசாயக்கடன் வாங்கிய விவசாயிகளும் இன்று வங்கிகிகள் கொடுக்கும் நெருக்கடியால் நாட்டில் பல பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம் இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.