ஜப்பானின் மேற்குப் பகுதியான வாகாயமாவில் காலை 11:48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது
ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட
பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில்
ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 50க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர்.