கோவை: சிங்காநல்லூர் பகுதியில் பனைமர நாற்றுப்பண்ணை மையம் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.

இம்மையம் குளக்கரையில் மரக்கன்றுகளை அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. 18 ஜூன் 2016ம் ஆண்டு கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் குளத்தை மறுசீரமைக்கும் திட்டம் தொடங்கியது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

இத்திட்டத்தில், குளங்களை பாதுகாப்பதற்கும், குளத்தின் மண் அரிப்பை தடுத்து வளப்படுத்துவதற்கும் குளத்தை சுற்றி பனை மரங்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு பனை மரம் நாற்றுப்பண்ணை மையம் குளத்தின் அருகில் திறக்கப்பட்டது.

இதன் மூலம் குளத்தை சுற்றி மரக் கன்று நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று சிங்காநல்லூர் குளத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் மரக்கன்றை நட்டு வைத்தார். இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.