கோவை பெரியகடை வீதி பகுதியில் திருட்டு வி.சி.டி விற்பனை நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொட்ர்ந்து உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது திருட்டு வி.சி.டி. விற்பனை நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதுப்பட சிடிக்கள் விற்ற சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த ஜியாவுதீன் (33) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த புதுப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்தனர்.