கோவை விமான நிலையத்தில் இன்று காலை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை விசாரித்த போது. அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த முர்ஷாத் என்பதும் ஷார்ஜாவில் இருந்து 700 கிராம் தங்கக்கட்டிகளை ஆசனவாயில் வைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கடத்திவரப்பட்ட தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மற்ற பயணிகளிடம் சோதனை நடத்திய போது கேரள மாநிலத்தை சேர்ந்த மற்றொரு வாலிபர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் சிகரட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.