கோவை மாநகராட்சியின் சார்பில் 28-வது வார்டுக்குட்பட்ட சரவணம்பட்டி, போயர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ''உலக கழிப்பறை தினம்'' விழிப்புணர்வு பேரணி கடைபிடிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் கலைக்குழுவினர் தாளம் அடித்துக்கொண்டே திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்ப்போம், சுகாதாரமான வீட்டுக் கழிப்பறையை உருவாக்குவோம் என்றவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்கும் விதத்தில் ''ஸ்வச் பாரத் மிஷன்'' சார்பில் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இதனை முற்றிலும் ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்தான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் வகையிலேயே உலக கழிப்பறை தினம் தற்போது கடைபிடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.