சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு: இறுதி பட்டியலில் இந்திய மாணவி

சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசுக்கான 3 பேர் கொண்ட இறுதி பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி கேகசன் பாசு இடம் பெற்றுள்ளார்.

துபாயில் உள்ள தேரா சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார் இந்திய மாணவி கேகசன் பாசு (16). சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பருவநிலை மாறுபாடு, உயிரினங்களிடம் அன்பு செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரது 'கிரீன் கோப்' அமைப்பில் 1,000 பேர் தன்னார்வ தொண்டர்களாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். கல்வியை சிறப்பான முறையில் படித்து வருவதற்காக இந்திய அரசின் விருதுகளையும், இசை, நடனம், பேச்சுப்போட்டி ஆகியவற்றில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரிசுகளை வாங்கி குவித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசுக்கான 3 பேர் கொண்ட இறுதி பட்டியலில் மாணவி கேகசன் பாசு இடம் பெற்றுள்ளார். இந்த பரிசு பெறுபவர் பெயர் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி நெதர்லாந்து நாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. அமைதி பரிசை, நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் வழங்க உள்ளார். சான்றிதழுடன், ஒரு லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 லட்சத்து 20 ஆயிரம்) பரிசாக வழங்கப்படும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...