டிரம்பை மோசமானவராக எண்ண வேண்டாம்: ஒபாமா

லிமா: டொனால்டு டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம் என்று லத்தீன் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.

ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் நடைபெற்று வருகிறது. தலைநகர் லிமாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். லிமாவில் இளைஞர்களுடன் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒபாமா பேசுகையில், வெள்ளை மாளிகையில் பணியாற்ற அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு தகுதி இல்லை என்ற தவறான முடிவுக்கு வர வேண்டாம்.

டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம். நிர்வாகம் எப்படி நடத்துகிறார் என்பதை பார்க்கும் வரை காத்திருங்கள். 

உலக நாடுகள் அமைதியாக, செழிப்புடன் ஒற்றுமையாக வாழும் பொருட்டு அவருடன் நிர்வாகம் இருக்கிறதா? இல்லையா என்று பார்த்து பின்னர் தீர்மானியுங்கள். புதிய அதிபர் குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம். இது உலக நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முக்கியமானதாகும் என்றார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வந்த ஒபாமா, தேர்தலுக்கு பிறகு அவருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...