கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட சூதாட்டம் நடைபெற்று வருவதாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, எஸ்.ஏ.பாலச்சந்திரன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று சீரநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் சூதாட்டம் நடப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதேப் பகுதியைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.