ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில், நாளை மறுநாள் போராட்டத்தில் ஈடுபட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்துள்ளது. மாற்று வழிகளை மத்திய அரசு அறிவித்திருந்தாலும், சில்லறை தட்டுப்பாடு, ஏடிஎம்-களில் போதிய பணம் இல்லாத சூழல், வங்கிகளில் நீண்ட வரிசை, அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.