கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (28). இவர் ஆலந்துரை பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் வேலை முடித்து வெல்டிங் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது அவர்களை வழி மறித்த 4 பேர் அடங்கிய கும்பல் தங்களை போலீஸ் என்று கூறியதாகவும் 4 தொழிலாளர்களையும் தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.
சம்பவம் தொடர்பாக அவர்கள் காவல் நிலையம் சென்ற போது, செல்போனை பறித்து சென்றவர்கள் போலீயான போலீசார் என்பது தெரியவந்தது. இது குறித்து ஹரிஷ் அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிந்த ஆலந்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.