கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ஹரிபிரசாத் (15). பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்படும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், திங்களன்று காலை மணிகண்டன், நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஹரிபிரசாத்தை பள்ளி செல்வதற்காக விட்டுவிட்டு திரும்பிச் சென்றுள்ளார்.
பின், சுமார் 10 மணியளவில் பள்ளியில் இருந்து மணிகண்டனை அழைத்து ஹரிபிரசாத் இன்று விடுமுறை எடுத்துள்ளார் என தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மணிகண்டன் பல்வேறு இடங்களில் ஹரிபிரசாத்தை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.