கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் 3 மண்டலங்களில் உள்ள வரிதாரர்கள் சொத்து வரி செலுத்தாததால் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 57-ல் மசக்காளிபாளையம், ஜி.வி.ரெசிடென்ஸியில் வசிக்கும் வரிதாரர்கள் சுபாஷ் சந்திர திவாரி மற்றும் திருவா சந்திர திவாரி ஆகியோர் சொத்து வரி ரூ.11 ஆயிரத்து 922 ரூபாய் மற்றும் 4 ஆயிரத்து 664 ரூபாய் செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதேப்போல், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 97-ல் குறிச்சி, அன்னை இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் சுமிதா என்பவர் சொத்து வரி ரூ.16 ஆயிரத்து 108 மற்றும் ரூ.19 ஆயிரத்து 308 செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 44-ல் சபரி கார்டன் பகுதியில் வசிக்கும் வி.சீதாலட்சமி என்பவர் சொத்து வரி ரூ.6 ஆயிரத்து 696 மற்றும் வார்டு 39-ல் ஆவாரம்பாளையம் பகுதியில் வசிக்கும் சாந்தா என்பவர் சொத்து வரி ரூ.76 ஆயிரத்து 360 செலுத்தாததால் 2 குடிநீர் இணைப்புகள் என ஆகமொத்தம் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.