கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டதாவது :-
எனது மகன் கார்த்திக்ராஜா கடந்த 17ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் இறந்ததாக கூறுகின்றனர். ஆனால், என் மகன் அவனது இருசக்கரவாகனத்தில் ஒரு பெண்ணுடன் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அவனை கல்லால் தாக்கி கொன்றதாக தெரிகிறது. மகனுடன் சென்ற பெண்ணுக்கு காயமே இல்லாத நிலையில் எனது மகன் மட்டும் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுதியுள்ளது எனவே. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.'
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.