கேரளாவில் இருந்து பெங்களூருக்கு உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கோவை மாவட்ட காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் காவல்துறையினர் நீலம்பூர் புறவழிச் சாலையில் புதனன்று (இன்று) அதிகாலை வழக்கமான வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, அதில் 11 லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, காரில் பணத்தை கொண்டு வந்த செந்தில்குமார், அங்குசாமி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இன்றி கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு பணத்தை கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், விசாரணைக்கு பின்னர் வருமான வரித்துறையினரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
பணத்தை கொண்டு சென்ற இருவரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
இருவரும் எதற்காக பணத்தை கொண்டு சென்றனர் என்பது குறித்தும், யாராவது கொடுத்து அனுப்பினார்களா அல்லது கருப்பு பணமா என்பது குறித்தும், செல்லாது என்பதால் ரூபாய் தாள்களை மாற்ற முயன்றார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.