பொள்ளாச்சியை அடுத்த சர்கார்பதி பகுதியில் உள்ள ஆழியார் பாசனத்துக்குட்பட்ட வேட்டைகாரன்புதூர் கால்வாய் மற்றும் பரம்பிகுளம் பாசனத்துக்குட்பட்ட சேத்துமடை கால்வாய்கள் கழிவு மற்றும் ஆகாயத் தாமரைகளால் நிறைந்து காணப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை எனக் கூறி விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில், வேட்டைகாரன்புதூர் கால்வாய் மற்றும் சேத்துமடை கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் வருவதில்லை எனும் குற்றச்சாட்டை முன்னிருத்தி வேட்டைகாரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
