கோவையில் கடந்த இரண்டு மாதங்ளுக்கு முன்பு சுகுணாதேவி என்ற 7 மாத நிறைமாத கர்ப்பிணி பெண் உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்து, நஞ்சுண்டாபுரம் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அம்சவேணி என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி ராமநாதபுரம் காவல்நிலைத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, ஆர்.டி.ஓ மதுராந்தகி மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் ஜெய்சிங் தலைமையில் சுகுணாதேவியின் உடல் மறுபிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று நஞ்சுண்டாபுர சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட சுகுணாதேவியின் உடலை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், அந்த உடல் கோவை அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.